காலமே உம்மைத் தேடுவேன் - கிறிஸ்தவ கீர்த்தனைA Christian keerthanai based on Psalm 63. இப்பாடல் சங்கீதம் 63 ஐ அடிப்படையாகக் கொண்டு மாயமாளவ கௌளை எனும் இராகத்தில் இயற்றப்பட்டது ஆகும். Lyrics has been given below. Plz give us your feedback.

தேவனைத் தேடுதல்

காலமே உம்மைத் தேடுவேன்
கர்த்தனே முழு மனதுடன்
தண்ணீரில்லா நிலத்திலே
தாகத்துடன் தேடிடுவேன்
தேவா வாஞ்சிக்கிறேன்

உம் வல்லமையும் மகிமையும்
காணவே மிக ஆசையே
உம் கிருபை சிறந்தது
உயிரிலும் உயர்ந்தது
உம்மை துதித்திடுவேன்

வாழ்நாள் முழுதும் வாழ்த்துவேன்
உயர்த்துவேன் உம் நாமத்தை
திர்ப்தியாகும் என் ஆத்துமா
உதடுகள் உம்மைப் போற்றும்
மகா களிப்புடனே மிக மகிழ்வுடனே

படுக்கையில் உம்மை நினைக்கையில்
தியானமே நடுச்சாமமே
நீரே என்றும் எந்தன் துணை
உம் நிழலில் தங்கிடுவேன்
களிகூர்ந்திடுவேன்

ஆத்துமா பற்றிக் கொண்டதால்
உம் வலக்கரம் எனைத் தாங்குதே
பகைவர்கள் பதராவர்
பொய்யர்கள் வாய்கள் மூடும்
களிகூருகிறேன் கர்த்தர் சமூகத்திலே

Related Videos